சர்வைவல் திரில்லர் படம் ஐமா

சர்வைவல் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ஐமா தமிழ் சினிமாவுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஐமா திரைப்படம் ஒரு புதுமையான புதுவைகையான அனுபவத்தையும் உணர்வையும்  கண்டிப்பாக கொடுக்கும் என்றபடத்தின் இயக்குநரிடம்அது என்ன ஐமா? என்றோம்ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது ஆகவே ஐமா எனும் சொல் இறைவனின் வலிமை என்கிறார் இப்படத்தின் இயக்குனர்எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இருமனிதர்களுக்கு  ஏற்படும் தடைகளையும் துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் விளையாட்டின் ஆட்டம் தான் ஐமாதுரோகங்கள் துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் தடைகள் தடுமாற்றங்கள் இவற்றை எதிர்கொள்ளும் அனுபவத்தில் ஆரம்பிக்கும் ஆற்றலின் விளக்கமே ஐமா திரைப்படம்எளிதாக புரியும்படி சொன்னால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு என்றார்இப்படத்தை எழுதி இயக்கியுள்ள ராகுல்.ஆர். கிருஷ்ணா.தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகன் யூனஸ்,கதாநாயகி எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்படத்தைப் பற்றி இயக்குநர் ராகுல்  ஆர். கிருஷ்ணா கூறும்போது,பல தடைகளை தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டுவந்துள்ளேன்.படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு.  சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது.9 கதாபாத்திரங்களைச் மட்டும் சுற்றித்தான் இந்த கதையே நடக்கிறது என்றார்

Comments (0)
Add Comment