தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்தத் தொடர் பார்வையாளர், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது.
இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்..,
ஜீ5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…,
பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு,அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்கமுடியும்.ஆனால் தடயம் சீரிஸில்,இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில்,அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது.இது மிகப்பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.
இதற்கு முன்பு ஜீ5 தளத்தில் பல சீரிஸ்கள்வெளியானது.
அதே நேரத்தில்,இந்தத் தொடரின் வெற்றிக்குப் பங்களித்த நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கும் எனது நன்றி என்றார்.
காக்டெயில் சினிமாஸ் (Cocktail Cinemas) தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசியதாவது…..
இந்தஅளவிலான வரவேற்பை ‘தடயம்’ சீரிஸுக்கு கொடுத்ததற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னையும்,எங்கள் முழுக்குழுவையும் மிகப்பெரிய கௌரவத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள்.தொழில்நுட்பக் கலைஞர்கள்,நடிகர்கள் என அனைவரும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் படைப்பை என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து,எனக்கு வாய்ப்பு கொடுத்த கௌஷிக் சார் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கூறவேண்டும்.அவரின் நம்பிக்கையும் ஊக்கமும் இல்லையென்றால் இன்று இந்தத் தருணம் எனக்குக் கிடைத்திருக்காது. அதேபோல் எப்போதும் எனக்குத் துணையாக இருந்து,எந்த பிரச்சனை வந்தாலும் தைரியம் கொடுத்து முன்னேற்றிய கனி அண்ணனுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.அவரின் ஆதரவும் ஊக்கமும்தான் இன்று நான் இங்கு நிற்கக்காரணம்.இந்த சீரிஸில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக்கலைஞர்கள்,நடிகர்
இந்த வெற்றிக்குப் பலரின் ஆதரவு காரணமாக இருந்தது.குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்.எந்த நேரமாக இருந்தாலும் இரவு நேரங்களிலும் கூட எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி,இந்தப் படைப்பை இந்தஅளவுக்குக் கொண்டு வர முக்கியப்பங்கு வகித்தார்.
நடிகர் சமுத்திரகனி பேசியதாவது….
ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும்.‘தடயம்’ அந்தநிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விசயங்களைச் சரிசெய்த மாதிரி உணர்வைத் தருகிறது.அதுதான் இந்தவெற்றியின் மகிழ்ச்சி.நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன்.ஆனால் அந்தப்பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளைக் கேட்கும் வாய்ப்பு அரிது.இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
இந்தப்படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது.அவரும்,அஜய்,நவீன்,