ராம்சரண், கதாநாயகியாக நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ள படம் பெத்தி. மேலும், கன்னட சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.புச்சி பாபு இயக்கியுள்ளார்.ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் தியேட்டர்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘பெத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளிலேயே 135.36 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.வரும் நாட்களிலும் திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.