சிக்மா- திரைப்பட விமர்சனம்

இந்திய சினிமாவில் எண்ணற்ற படங்கள் பணத்தை கைப்பற்றுவதற்காக கேங்வார், தனி நபர் சாகசம் என ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் மற்றொரு படமாக வந்திருக்கும்படம் சிக்மா.
போதைக்கடத்தல் மன்னன் சம்பத்,பலநூறு கோடி ரூபாயை ஒரு கண்டெயினரில் பதுக்கி வைக்கிறார்.அதனுடைய இன்னொரு திறவுகோல் பல இடங்களுக்குப் பயணித்து கதாநாயகன் சந்தீப்பிடம் வந்து சேருகிறது.அதைத் தெரிந்துகொண்டவர்கள் அவரைத் துரத்துகிறார்கள்.கடைசியில் என்னவாகிறது? என்பதுதான் அறிமுக இயக்குநர் ஜோசன் விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள சிக்மா படம்.

யூடியூப் சேனல் நடத்துகிறார் நாயகன் சந்தீப்.கடனில் தத்தளிக்கிறார்.அதனால் எப்படியாவது பெரும்பணம் சம்பாதிக்கவேண்டுமென ஆசைப்பட்டு சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்.அங்கு ஒரு பென் டிரைவ் கிடைக்கிறது.அதன்மூலம், பல விசயங்கள் வெளிவருகிறது.அதனால் பகையும் வருகிறது.இடையில் காதலும் செய்கிறார்.சாமானியன் சாமர்த்தியக்காரனாகவும் இந்தப்பயணத்தை நாயகன் சந்தீப்,சரியாகக் கடந்திருக்கிறார்.எல்லா நேரங்களிலும் அந்த நேரத்துக்குத் தக்க நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பரியா அப்துல்லாவுக்கு படத்தில் நிறைய இடம் கொடுக்கப்படவில்லை.கிடைத்த குறைவான நேரத்திலும் தன்
இருப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

சம்பத்,ஷிவ்பண்டிட்,ஜேக்பி ஆகியோர் எதிர்மறை நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.மூவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.நடன இயக்குநர் ராஜுசுந்தரம்,ஷீலா ராஜ்குமார் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இதுபோன்ற படங்களுக்கு எவ்வகையான ஒளியமைப்பைப் பயன்படுத்த வேண்டுமோ அவற்றை முறையாகப் பயன்படுத்தியுள்ளார்.

தமனின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் படத்தின் தன்மையை உயர்த்திக்காட்ட முயன்றிருக்கிறார்.

கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.படத்தை வேகமாக நகர்த்திச் செல்லவேண்டும் என்கிற குறிக்கோளோடு வேலை செய்திருக்கிறார்.

வெங்கட் மற்றும் சில்வாவின் சண்டைக்காட்சிகள் படத்திற்கும் நாயகனுக்கும் பலம் சேர்த்திருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கிறார் ஜேசன் சஞ்சய்.ஏற்கெனவே பழகிய மையக்கதை என்றாலும் அதைநோக்கிச் செல்லும் கிளைக்கதைகளைப் புதிதாக்கியிருக்கிறார்.கதாபாத்திர வடிவமைப்புகளும் தற்காலத்துக்கேற்ப இருக்கவேண்டும் என்று பார்த்துப் பார்த்துப் படைத்திருக்கிறார்.

இதுபோன்ற கதைகளில் முடிவு எப்படியிருக்கும் என்று யூகித்துவிட முடியும் எனும் பலவீனம் இருக்கிறது.அதில் சில குழப்பங்களை ஏற்படுத்தி

படத்தைப் புதிதாகக் காட்ட நினைத்திருக்கிறார்.கதை மற்றும் திரைக்கதையின் போக்கில் பழைய வாசனை இருக்கிறது என்றாலும் பாத்திர வடிவமைப்புகள் மற்றும் உருவாக்கத்தில் அந்த எண்ணம் வந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.
Comments (0)
Add Comment