சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்க்ஷய் குமார் நடிக்கும் கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இவர் முன்னணி இயக்குநர் H. வினோத்த்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். H.வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள விஷ்ணு அமரன், தற்போது இயக்குநராக தனது புதிய பயணத்தை இப்படத்தின் மூலம் தொடங்குகிறார்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவை சரவணன் ராமசாமி மேற்கொள்கிறார். இசையை ஹேஷம் அப்துல் வஹாப் அமைக்கிறார். படத்தொகுப்பை கலைவாணன். R கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பை ஆர்த்தி நீலகிருஷ்ணன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P.S.ஹரிஹரன் கவனிக்கிறார். விளம்பர வடிவமைப்பை அம்பானி (ADFX) கவனிக்க, சண்டைக் காட்சிகளை ஆக்சன் சந்தோஷ் அமைக்கிறார். நிர்வாக தயாரிப்பாளராக மணிகண்டன், கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அருண் K பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.