சிலம்பத்தின் பெருமை பேசும் சிலம்பம் திரைப்படம்

லக்‌ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில்ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கி தயாரித்துள்ள  திரைப்படம் ‘சிலம்பம்’. இதில் அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்கள்.
டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு  குமார் M ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக் சார்லஸ் படத்தொகுப்பு செய்ய, கென்னடி நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.  பொன்னேரி புயல் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.  இணை இயக்குநராக ஏ.அருண்குமார் பணியாற்ற, தயாரிப்பு நிர்வாகியாக கோவிந்தராஜ் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 16 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்ஸி விஜயன், இயக்குநர் பேரரசு, பவர் பாண்டியன், இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் கூல் சுரேஷ், ஸ்டண்ட் யூனியன் தலைவர் கே.அசோக், செயலாளர் சுகுமார், பொருளாளர் ஜான், இயக்குநர் ரவி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
படத்தின் இயக்குநர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி பேசுகையில்
,
“இந்த படத்தில் நிறைய சிலம்பம் மாஸ்டர்களை வச்சி பண்ணியிருக்கோம்.  ஆதம்பாக்கம் துரை மாஸ்டர், ஜோதி மாஸ்டர் ஆகியோர் அதிகம் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். எனக்கும் ஆசான் பவர் பாண்டியன் மாஸ்டர் தான், என் பிள்ளைகளுக்கும் ஆசான் அவர் தான். இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஹீரோக்கள் அவரிடம் தான் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் மிகப்பெரிய இடத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஸ்டண்ட் யூனியன் இருக்கும் சுமார் 600 பேர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தான். அப்படி ஒருவரிடம் நாங்களும் பயிற்சி பெற்றது பெருமை. ஒழுக்கம் என்ற பாடத்தை அவரிடம் தான் படிக்க வேண்டும். சிலம்பம் என்றாலே ஒழுக்கம் தான், அதையே மிக ஒழுக்கமாக சொல்லிக்கொடுப்பார்,
இந்த படத்தில் சிலம்பம் பயிற்சி பெற்ற 300 பேரை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். சிலரிடம் ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவார்கள், அதை தவிர்த்துவிட்டு தமிழில் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறோம்.  ஒரு காலத்தில், கராத்தே, பாக்ஸிங் பயிற்சிக்கு பிள்ளைகளை தந்தைகள் அழைத்துச் செல்வார்கள், ஆனால் இப்போது சிலம்பம் பயிற்சிக்கு பிள்ளைகளை அவர்களது தாய்மார்கள் தான் அழைத்துச் செல்கிறார்கள். பயிற்சி முடியும் வரை அவர்கள் உடன் இருக்கிறார்கள், அந்த அளவுக்கு சிலம்பம் மீது மக்களுக்கு ஆர்வம் வந்துவிட்டது. இன்று தெருவுக்கு நூறு பேர் சிலம்பம் பயிற்சி பெறுகிறார்கள். இந்தியா அளவில் சிலம்பம் வளர்ந்து இருப்பதோடு, சிலம்பம் வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் அளவுக்கு இந்த கலை உயர்ந்திருக்கிறது.
படத்தின் கதையில் படை பலம், பணம் பலம், அதிகார பலம் அனைத்தையும் வெல்லுகின்ற ஆசானாக சிலம்பரசன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார். எப்போ நான் கேமரா முன்பு நிற்பேன், எப்போது பேட்டி கொடுப்பேன் என்று ஏங்கியிருக்கிறேன், சத்தம் போட்டு கத்தியிருக்கிறேன். அப்போது என் மனைவி தான் ஊக்கம் கொடுத்து, ஒரு நாள் நீங்க, கேமரா முன்பு நிற்பீர்கள் என்று நம்பிக்கை கொடுப்பார்.
இந்த படத்திற்காக பல பிரச்சனைகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால், நாங்கள் நினைத்தது போல் படம் சிறப்பாக வந்திருக்கிறது.” என்றார்.
Comments (0)
Add Comment