சூரி நடித்த’மண்டாடி’திரைப்படத்தின் சாதனை வசூல்

செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்த இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது.திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்ததுடன் 4வது வாரத்திலும் பார்வையாளர்கள் குறையவில்லை.இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் 25 நாட்களில் உலகளவில் 150 கோடியையும் தமிழகத்தில் மட்டும் 100 கோடியையும் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சூரி நடித்த திரைப்படங்களிலேயே இப்படம் அதிகமான வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments (0)
Add Comment