நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘ரெட்ரோ’. இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை என்றாலும், வசூல் ரீதியாக குறை வைக்கவில்லை. இப்படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த்உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ’ரெட்ரோ’ திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் 234 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகபடக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனை தெளிவாக குறிப்பிடாமல் இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரின் ஓரத்தில் திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத வசூல் என்று சிறியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் திரையரங்க வசூலுடன் சேர்த்து ஓடிடி, சாட்டிலைட் உரிமை உள்ளிட்டவற்றுக்கான தொகையும் இதில் அடக்கம் என்பதை படக்குழு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது. இதுவரை திரையரங்க மொத்தவசூல் விபரங்களை மட்டுமே திரைப் படங்களுக்கு வெளியிடப்பட்டு வந்த நிலையில், திரையரங்கு அல்லாத வருவாயையும் சேர்த்து ஒட்டுமொத்த வருவாயை ரெட்ரோ படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘ரெட்ரோ’. இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை என்றாலும், வசூல் ரீதியாக குறை வைக்கவில்லை. இப்படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த்உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ’ரெட்ரோ’ திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் 234 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகபடக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனை தெளிவாக குறிப்பிடாமல் இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரின் ஓரத்தில் திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத வசூல் என்று சிறியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் திரையரங்க வசூலுடன் சேர்த்து ஓடிடி, சாட்டிலைட் உரிமை உள்ளிட்டவற்றுக்கான தொகையும் இதில் அடக்கம் என்பதை படக்குழு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது. இதுவரை திரையரங்க மொத்தவசூல் விபரங்களை மட்டுமே திரைப் படங்களுக்கு வெளியிடப்பட்டு வந்த நிலையில், திரையரங்கு அல்லாத வருவாயையும் சேர்த்து ஒட்டுமொத்த வருவாயை ரெட்ரோ படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.