அரசியல் பிரச்சார படமாக, விஜய்தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும் என திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட படம் ஜனநாயகன் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படும் வகையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக 2026 பொங்கல் திருநாளில் ஜனநாயகன் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தணிக்கை குழு சான்றிதழ் வழங்குவதற்கு தாமதப்படுத்தியதால் ஜனவரியில் படத்தை வெளியிட முடியவில்லை. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து பெரும்பான்மை இல்லாத நிலையில் சில கட்சிகள் ஆதரவுடன் விஜய் தமிழ்நாடு முதல் அமைச்சராக பதவிக்கு வந்த பின்னர் ஒரு வழியாக நேற்றைய(9.07.2027) தினம் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை குறிக்கும் வகையில் இருந்த TVK என்கிற வசனத்தை நீக்கியுள்ளது தணிக்கை குழு.
ஜனநாயகன் படத்திற்குக் கொடுக்கப்பட்ட 12 வெட்டுக்கள் விவரம்…
1.டாக்டர் அம்பேத்கர் படம் புத்தக அட்டையில் தோன்றும் காட்சிகள் மாற்றப்பட்டன.
2.“அம்பேத்கர் சட்டம்” என்ற வசனம் “டிவிகே சட்டம்” என மாற்றப்பட்டது; படம் முழுவதும் “டிவிகே” பயன்பாடு நீக்கப்பட்டது.
3.இந்திய தேசியக் கொடி தரையில் விழும் காட்சிகள் நீக்கப்பட்டன.
4.“பாகவதம்” மற்றும் “ரங்கநாதர்” என்ற சொற்கள் மௌனப்படுத்தப்பட்டன.
6. “தேவி………………யா பையா” மற்றும் “ஓ…….தா” ஆகிய சொற்கள் மௌனப்படுத்தப்பட்டன.
7.“ஓம்”, “நியூ இந்தியா” (ஆபரேஷன் மேலுஹா விளக்கத்தில்), சதாம் ஹுசைன் தூக்கில் போடப்பட்டதைப் பற்றிய வசனம் ஆகியவை மௌனப்படுத்தப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.
8.டிசி அலுவலக பேட்ஜ் அவமரியாதையாக உருட்டப்படும் காட்சி நீக்கப்பட்டு மாற்றப்பட்டது.
9.“பொன்னோட… கொடுத்து வச்சிருக்கணும், உடம்பு இருக்குன்னு” என்ற முழு வசனம் மௌனப்படுத்தப்பட்டது.
10.“இந்தியா என் கால்ல விழ வைக்கறேன்” என்ற வசனம் மௌனப்படுத்தப்பட்டது.
11.குழந்தை எரியும் காட்சிகள் நீக்கப்பட்டு மாற்றப்பட்டன.
12.“சிலுவையா” என்ற சொல் மௌனப்படுத்தப்பட்டது.
“ஷீலா ராணி” என்ற பெயர் படத்தில் இடம்பெறும் இடங்களில் மாற்றப்பட்டுள்ளது.