ஜமா படப்பிடிப்பு நிறைவடைந்தது.

ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த புதிய படம்!படப்பிடிப்பு  நிறைவு பெற்றிருக்கிறது இந்த படத்தைMillion Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ளது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தை இந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது.
‘ஜமா’ வெற்றியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள பாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்திருக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனித்திருக்கிறார்.

 

Comments (0)
Add Comment