தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை, டிரைலர் வெளியானது

போர் தொழில் படத்தின் இயக்கத்தில்தனுஷ் நடித்துள்ள படத்துக்கு ‘கர’ எனப் பெயரிடப்பட்டு முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
 இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துவிட்டது படக்குழு. கோடை விடுமுறைக்கு படத்தினை வெளியிடவுள்ளனர்.
வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ‘கர’ எனப் பெயரிடப்பட்டு நேற்று(15.01.2026) காலையில் முதல் பார்வை வெளியிடப்பட்டது.  மாலையில் படத்தின் டீஸரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. இரண்டிற்குமே இணையத்தில்  வரவேற்பு கிடைத்துள்ளது. 1990 ஆம் ஆண்டுகாலகட்டத்தின் பின்னணியில் நடக்கும் உணர்வுப்பூர்வ த்ரில்லராக இதனை உருவாக்கி இருக்கிறது படக்குழு.

1990 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் ‘கரசாமி’எனும் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, மர்மம் கலந்த பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமுடு, கருணாஸ், ப்ரித்வி பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

 

Comments (0)
Add Comment