தமிழ் சினிமாவை 2025 ஆம் ஆண்டில் வாழ வைத்த 20 படங்கள்

தமிழ் சினிமாவில் 2025 ஆம் ஆண்டு 285 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியானது.
இவற்றில் 100 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து 7 படங்கள் தயாரிக்கப்பட்டது.
50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் 3 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
 25 கோடி முதல் 50 கோடிக்குள் 10 படங்களும், 15 கோடி முதல் 25 கோடி ரூபாய் செலவில் 8 திரைப்படங்களும், 8 கோடி முதல் 15 கோடிக்குள் 17 திரைபடங்களும், 5 கோடி முதல் 8 கோடி ரூபாய் செலவில் 17 படங்களும், 3 முதல் 5 கோடி ரூபாய் செலவில் 53 திரைபடங்களும், 3 கோடி ரூபாய் செலவில் 170 திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகை சுமார் 3300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் திரையரங்குகளில் படங்களை வெளியிட்டதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வருவாய் இந்திய அளவில் 855 கோடி , வெளிநாட்டு திரையரங்குள் மூலம் 255 கோடி ரூபாய் ஆக 1,110 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
தொலைகாட்சி, ஓடிடி, ஆடியோ, இந்தி உரிமைகள் விற்பனை மூலம் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வருவாய் 1790 கோடி ரூபாய். ஆக மொத்தம் படத்தயாரிப்பில் செய்யப்பட்ட முதலீட்டு தொகை 3300 கோடி ரூபாயில் 2950 கோடி தயாரிப்பாளர்களுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
இந்த வருடம் வெளியான நேரடி தமிழ் படங்களில் 15 முதல் 500 கோடி ரூபாய் வரை வசூல் செய்த முதல் 20 படங்கள்:
1. கூலி-501.25
2. குட் பேட் அக்லி- 238.50
3. டிராகன்- 147.00
4. விடாமுயற்சி- 138.00
5. டியூட்- 114.50
6. ரெட்ரோ- 96.75
7. மதராஸி- 96.50
8. தக்லைப்- 96.25
9. தலைவன் தலைவி- 90.50
10. டூரிஸ்ட் பேமிலி-85.00
11.வீ.தீ.சூரன்- 69.00
12. இட்லி கடை-65.25
13. பைசன்- 63.25
14. மதகஜராஜா-63.00
15. மாமன்- 51.00
16. காந்தா-35.00
17. குடும்பஸ்தன் – 28.50
18.ஆ.பா. பொல்லாதது- 25.50
19. டி.டி. நெக்ஸ்ட் லெவல்-23.25
20. காதலிக்க நேரமில்லை- 15.75
Comments (0)
Add Comment