தீபாவளி போட்டியில் பைசன் காளமாடன்

மாரி செல்வராஜின் இயக்கத்தில்,  துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும்,   திரைப்படமான  “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின்  தயாரிப்பில்,
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது.
நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பை,  அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது.

 

Comments (0)
Add Comment