துர்க்கா ஸ்டாலின் வெளியிட்ட அனந்தா திரைப்பட முன்னோட்டம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா, அண்ணாமலை, வீரா, பாபா படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ‘அனந்தா’ . இன்னர் வியூ பேனரின் கீழ் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளஇந்தப் படத்தில் சுகாசினி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்ய சாய்பாபா வாழ்க்கையை பின்ணணியாக கொண்டஇந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடிகை சுகாசினி, பாடலாசிரியர் பா விஜய், பிக்பாஸ் அபிராமி, தலைவாசல் விஜய், பின்னணி பாடகர் மனோ, ஒய் ஜி மகேந்திரன், கலைப்புலி எஸ் தாணு, நிழல்கள் ரவி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் அதனை தொடர்ந்து, நேற்று(22.12 2025) மாலை இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு
முதல் அமைச்சர்
மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

 

Comments (0)
Add Comment