துல்கர் சல்மானுடன் மிஷ்கின் இணையும் புதிய படம்  “ஐ அம் கேம்” 

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், துல்கர் சல்மான் நடிக்கும் 40 வது திரைப்படமான “ஐ அம் கேம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தை, துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர்.
 இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments (0)
Add Comment