நாயகனாக நடித்திருக்கும் பிருத்விராஜ் துப்பாக்கியோடு அவர் அறிமுகமாகும் காட்சியிலிருந்து ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சரியப்படுத்துகிறார்.
பிரித்விராஜின் மனைவியாக நடித்திருக்கிறார் பார்வதி.யாரும் ஏற்கத்துணியாத வேடத்தை ஏற்றிருக்கிறார்.அதில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜகான்,ஜேக்கப் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன்,முதலமைச்சராக நடித்திருக்கும்விஜயராகவன்,கா
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் உழைப்பில்,சண்டைக்காட்சிகள் அனைத்தும் வியக்கும் இரகம்.அதற்கு நேர்மாறாக மற்ற காட்சிகள் அமைந்திருப்பது கவனிக்க வைக்கிறது.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை,காட்சிகளின் காலில் சக்கரம் கட்டிவிட்டிருக்கிறது.
படத்தொகுப்பாளர் ரமீஸ் எம்.பி,காட்சிகளின் வேகமும் குறையாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளும் மாறாமல் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
யானிக் பென்,கலை கிங்சன் மற்றும் அமித்ஜாலிபாஸ்டின் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.
சமீர் அப்துல் எழுத்தின் வீரியம் குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நிசாம்பசீர்.வங்கிக் கொள்ளைக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத ஒருவரை வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான திரைக்கதையை அமைத்து,தங்கள் நடிப்பின் மூலம் திரைக்கதை மேம்பாட்டிற்குஉதவும் மிக மிகப் பொருத்தமான நாயகன் நாயகியைத் தேர்வு செய்து,மனித உணர்வுகளின் பல்வேறு அடுக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குநர்.