நாயகர்களாக நடித்திருக்கும் சபரி மற்றும் ரோகிந்த் ஆகிய இருவரும் புதுமுகங்கள்.அவர்களுக்கு மாறுபட்ட கணவர்கள் வேடம்.அந்த வேடத்துக்கு அவர்கள் தோற்றமும் நடிப்பும் உதவியிருக்கிறது.
சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோர் சிரிக்க வைப்பதற்காக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறப்புத் தோற்றத்தில் வரும் கே.ஆர்.விஜயா,பவன் கிருஷ்ணா, இயக்குநர்எம்.எஸ்.மூர்த்தி,
அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றியே கதை நிகழ்வதால் அதிலும் பல மாற்றங்களைக் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா.
படத்தை போரடிக்காமல் கொண்டு செல்ல மீனாட்சிசுந்தரத்தின் எடிட் உதவியிருக்கிறது.ஜெயமுருகனின் கலை இயக்கம் கதைக் களத்திற்குப் பலம் சேர்க்கிறது.
சாதி தேவையில்லை,அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும் ஆகிய உயரிய கருத்துகளைச் சொல்ல வேண்டுமென்பதற்காக திகில் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
நாயகி மீதான தொடர் கொலை முயற்சியும் அவற்றிலிருந்து அவர் தப்பிக்கும் விதங்களும்,நட்பாகப் பழகிக் கொண்டிருக்கும் 99 ஆம் எண் வீட்டில் ஆளே இல்லை, குடியிருப்புச் சங்கத்தின் தலைவராகவும் நடித்திருக்கும் இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தியின் இரவுநேரப் பயணங்கள் ஆகிய விசயங்களைக் கலந்து சுவாரசியமான திரைக்கதை அமைத்திருக்கிறார்.
திகில் பட பார்வையாளர்களுக்கு அளவான விருந்தாக இருக்கும் 99/66