பாக்ஸர் லேடி நடிக்கும் “லைட்வெயிட் பேபி”

ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக்பாஸ் பிரபலம்,  டிஜிட்டல் திரை நட்சத்திரம் என பிரபலமான விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் ‘லைட் வெயிட் பேபி’  திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்தப் படத்தை ஹிதா ஸ்டுடியோஸ்  தயாரிக்கிறது.
படத்தின் தலைப்பை வெளியிடும் நிகழ்வில் பேசிய விக்கல்ஸ் விக்ரம், ”2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன்.
‘நிலவைக் கொண்டு வா’ என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா – சிம்ரன் மேடம் ஆகியோர் தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள். திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.
எனக்கு இயக்குநரை சமீபத்தில்தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம் என கேட்டபோது பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றார். ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிவீல் செய்துவிடலாம் என திட்டமிட்டோம்.
2016 ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்கப்பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் படத்திற்கான டைட்டில் ‘லைட் வெயிட் பேபி.’
படத்தின் டைட்டிலை விட மிகவும் சுவாரசியமான விசயம் ஹீரோயின்தான். அவர் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா. இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை உருவாக்கி விட்டு உங்களிடம் வருகிறோம்” என்றார்.

 

Comments (0)
Add Comment