இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது. அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது பாராட்டப்பட்ட குறும்படமான “லிட்டில் விங்ஸ்” வழங்குகிறது.
தேசிய விருது பெற்ற “லிட்டில் விங்ஸ்”, திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, இது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு பார்வையாளர்களுக்காக வெளியிடப்படுகிறது. இதையொட்டி லிட்டில் விங்ஸ் குறும்படம் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து குறும்பட குழு செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் நவீன், நடிகை மணிமேகலை, நடிகர் ராம்ஜி, இயக்குநர் ராஜூமுருகன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த குறும்படத்தை எழுத தொடங்கும்போது இந்த இடத்திற்கு வருவதற்கு திட்டமிடவில்லை.ஆனால், குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்லும் என்ற கனவு இருந்தது,விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. எல்லாபடமும் எழுத தொடங்கும் முன்பு ஒரு கேள்வி இருக்கும்.அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கும் போதுதான் கதை,திரைக்கதை அமைத்து படமாக முயற்சி செய்கிறோம்.அடிப்படையில் இந்தகதை கொரோனா காலக்கட்டத்தில்தான் எழுதப்பட்டது.
கொரோனா காலக்கட்டத்தில் நிறைய துர்மரணங்கள் நிகழ்ந்த சமயத்தில்,நம் ஆசைகளும் நம் மரணத்துடன் மரித்து விடுகிறது.திடீரென நம் மரணத்துடன் நம் ஆசையும் சேர்ந்து போய்விடுகிறது.உலகமும் அதோடு ஓடிக்கொண்டேஇருக்கிறது.அந்த
கேள்வியை குறிப்பிடும் நோக்கத்தில்தான் இந்தகதை எழுதப்பட்டது.அவர் ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படுகிறாரே தவிர,அதில் இருக்கும் விஷயங்கள் இதுதான்.எங்கள் ஊரில் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்களின் வாழ்க்கையில் தீர்வு இருக்காது.அது ஒரு தொடர் போல நீண்டுகொண்டே இருக்கும்.அந்தமாதிரியான வீடுகளில் சிலர் குடித்துவிட்டு உயிரிழந்துவிடுவார்கள்.அதன்பிறகு அந்த பெண்கள் சுதந்திரமாக இருப்பது நமக்கு தெரியும்.அந்த சூழலில் ஒருவரது மரணம் இன்னொருத்தருக்கு விடுதலையை கொடுக்கிறது. இந்த இரு கேள்விகளை குறிப்பிடும் வகையில்தான் இந்தகதையை
நான் எழுதினேன்.கந்தர்வன் எழுதிய கதை இதற்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது.இதுதான் இந்தப்படம் ஆரம்பித்த விதம்.இதன் கதையை எழுதி முடித்ததும்,என் இயக்குநர் ராஜுமுருகனிடம் காண்பித்தேன்.நான் எழுதும் கதைகளை இயக்குநரிடம் காண்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன்.
என் முதல் சிறுகதை விகடனில் வெளிவர முக்கிய காரணமாக என் இயக்குநர் இருந்தார். அந்தவகையில், இந்தகதையை படித்ததும் அதனை செய்வதற்கு அவர் தயாராக இருந்தார்.எனினும்,இதனை செயல்படுத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தன.
இதில் சேவல் இருக்கிறது,
காட்சிகளை கிராஃபிக்ஸ் செய்கிறோமா அல்லது உண்மையில் படமாக்குகிறோமா என்பது போன்ற சிக்கல்களை பொறுமையாக கடந்துவர நேரம் ஆகிவிட்டது.
என் நண்பர் அசோக், திலானி ரவீந்தரன் என்ற தயாரிப்பாளர் கனடாவில் இருந்து திரைக்கதை பற்றிய போட்டி இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.நானும், இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதி அனுப்பிவிட்டேன். இந்தப்படத்தின் முதல் தயாரிப்பாளர் திலானி ரவீந்திரன்தான்.
அந்தப் போட்டி தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய போட்டியாளர்களை கொண்டிருந்தது. அதில் என் திரைக்கதை முதல்பரிசை வென்றது. அதில் கிடைத்த தொகை,ராஜூமுருகன் சார் இணைதயாரிப்பு மூலம்தான் இந்தப்படம் எடுக்கப்பட்டது.எடுத்த பிறகு இந்தப்படம் ஒருவருடம் முழுக்க சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது.அதன்பிறகு,கேரளாவில் நடந்த திரைப்பட விழாவில் விருது வென்றது. அதன்பிறகு இந்தப்படத்திற்கு வெளிச்சம் கிடைத்தது.
இதனால்,நாங்களாக இந்தப்படத்தை வேறு எங்கும் அனுப்பவில்லை.
விருது வென்றதால் பல சர்வதேச திரைப்பட விழாக்கள் சார்பாக எங்களை தொடர்பு கொண்டு படத்தை அனுப்பக் கோரினர்.இந்தப்படத்தை சரியாக கொண்டு சேர்க்க அதிக நேரம் ஆனது.
தனித்து செயல்படும் போது,பெரிய நட்சத்திரங்கள் இன்றி எடுக்கும் போது பெரிய ஓ.டி.டி. தளங்களில் முயற்சி செய்தோம். அதற்கு நிறைய காலதாமதம் ஆனது.அதன்பிறகு இங்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப்படத்தை தாங்குவது மிகப்பெரிய விஷயம்.
இனிவரும் உதவிஇயக்குநர்களுக்கு இதுவொரு புது வழியாக இருக்கும்.ட்ரீம் வாரியர்ஸ் குழுவில் பிரகாஷ் சார் தொடங்கி அனைவருக்கும் நன்றி.விருது வாங்கும் முன்பே இந்தப்படத்தை பிரகாஷ் சாருக்கு பிடித்துவிட்டது.அதன்பிறகு பிரபு சார்,குகன் சார், அலாவுதீன்,கிருஷ்ணா என அனைவக்கும் நன்றி.
அதன்பிறகு மணிமேகலை அம்மா,காளிதாஸ் ஐயா என இருவரும் செட்டிற்கு வரும் முன்பே நடிப்பு பயிற்சி அளித்திருந்தோம்.
லைவ் ரெக்கார்டிங் என்பதால் எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார்ப்படுத்தவேண்டியிருந்தது.
படப்பிடிப்பு தளத்தில் ஒரு விஷயத்தை கூட மாற்றவில்லை.கதையாக என்ன எழுதப்பட்டதோ, அதைத்தான் எடுத்தோம்.
இந்தப்படத்தில் சிறப்பாக நடித்த காளிதாஸ் தோழர்,தற்போது உயிருடன் இல்லை.அவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வீதிநாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தார்.தன் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என அதிகம்நம்பியிருந்தார்.
இந்தப்படம் அவருக்கு அதை அமைத்துக்கொடுத்தது.கோவா,மும்பை என திரையிட்ட இடங்களில் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ராம்ஜியை நான் மெகந்தி சர்க்கஸ் படத்தில் கண்டெடுத்தேன்.அவருக்கு மதுரை வட்டாரம் சிறப்பாக வரும்.மதுரையில் இருந்து வந்துள்ள ராம்ஜி சாருக்கு நன்றி.தயாரிப்பு நிறுவனங்களான வியூஃபைன்டர், ராஜூமுருகன் சாரின் காம்ரேட் டாக்கீஸ் ஒத்துழைப்பு வழங்கினர்.காம்ரேட் டாக்கீஸ் ஊடக ரீதியில் சென்றடையும், பலவிதங்களில் உதவியாக இருந்தனர். நான் உதவிஇயக்குநர் என்பதால் கூடுதல் சிறப்பாக இருந்தது.உதவிஇயக்குநர் என்பதால் தயாரிப்பாளராக இன்றி ராஜூமுருகன் சாரிடம் ஆலோசனைகள் கேட்க முடிந்தது.அவர் சொன்ன தவறுகளை சரி செய்ததால், இந்தப்படம் மேலும் சிறப்பாக மாறியது.
மாநகரம் படத்தின் எடிட் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.அதை பார்த்தபிறகு,நான் உதவிஇயக்குநர் என்பதாலும் அப்போது நான் ஜோக்கர் படத்தில் பணியாற்றி இருந்தேன்.அந்தசமயத்தில் மாநகரம் படத்திற்காக பிரபு சார் வெற்றி விழா நடத்தினார்.அந்தவிழாவில் பிலோமின் ராஜை சந்தித்தேன்.அதற்கு அடுத்தநாள் நான் அவரை அலுவலகம் சென்று பார்த்தேன்.அதன்பிறகு அவர் நிறைய பெரிய படங்களில் பணியாற்றினார்.எனினும்,ஒரு குறும்படத்தில் பணியாற்றுகிறார் என்றால்,அவருக்கு படங்களின் மேல் உள்ள காதல்தான் காரணம்.
முதல் சந்திப்பின்போது நானும் பிலோமின் சாரும் அதிகம் பேசவில்லை.அவர் படத்தின் கதையை மட்டும் கேட்டார், சில காட்சிகளை மட்டுமே பார்த்தார்.பிறகு தனது குழுவினருடன் பணிகளை தொடங்கிவிட்டார்.அவரது குழுவில் சந்தோஷ்,சக்தி மிகவும் ஆதரவாக இருந்தனர். ஒவ்வொரு திரைப்பட விழாவிற்கு அனுப்பும் போதும், ஒவ்வொருவிதமாகஅனுப்பவேண்டும்.அதன்பிறகு தணிக்கை,விலங்குகள் நலவாரியம்,தேசிய விருதுகளுக்கு சமர்பிப்பது என ஒவ்வொரு நடைமுறையிலும் அவர்கள் உறுதுணையாக நின்றனர்.
கலை இயக்குநர் விஜய் பற்றி பேசியாகவேண்டும். படத்தில் வரும் சுவர்,முட்டையில் இருக்கும் குஞ்சு உள்ளிட்ட சிறுசிறு விஷயங்களை மிக நுனுக்கமாக அவரே செய்தார்.மிக சிறிய பட்ஜெட்டில் பல பொருட்களை வாங்கும்போது,எல்லா பணிகளையும் அவரே செய்தார்.படத்தில் அவருக்கு உதவியாளர்இல்லை.இதனால்,
அவரே கலை இயக்குநர்,உதவி கலைஇயக்குநர் என எல்லா பொறுப்புகளிலும் தனி மனிதனாக உழைப்பைக் கொடுத்தார்.
இந்தப்படத்தின் லைவ் ரெக்கார்டிஸ்ட் ராகவ்.இந்தப் படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்படுவதால், படத்தின் காட்சி மட்டுமின்றி அதற்கான ஓசையும் சரியாக பதிவாக வேண்டும்.இதனால்,பலமுறை ரீடேக் செய்யவேண்டியிருந்தது.மேலும்,
காட்சியின் ஒலி அமைப்பு சரியாக பதிவாகி இருக்கிறதா,காட்சியில் தேவையற்ற ஒலி ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.அப்படி பதிவாகி இருந்தால்,மீண்டும் படமாக்க வேண்டும்.இந்தப்பணியை ராகவ் மிகச்சிறப்பாக செய்தார்.இந்தப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி பணியாற்றினார்.
ராஜூமுருகன் சார் மூலமாகத்தான் இந்தக்குழு அமைந்தது.சந்தோஷ் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் உதவியாளர்.அவர் தற்போது இயக்குநர் ராமின் பறந்துபோ படத்தில் பணியாற்றி இருக்கிறார்.இந்தப்படத்திற்காக சிறிய பட்ஜெட்டில் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்துள்ளார்.
ஒலி வடிவமைப்பாளர்களான சுரேன் மற்றும் கூத்தன் அவர்கள் இங்கு வரவில்லை,வேறொரு ரெக்கார்டிங்கில் உள்ளனர்.கலரிஸ்ட் ரங்கா சார் இங்குதான் இருக்கிறார். இவர் பல பெரியபடங்களில் பணியாற்றி வருகிறார். எங்கள் இயக்குநர் குக்கூ படத்திற்கும் அவர்தான் கலரிஸ்ட்.நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகுழு என இந்த மாதிரி அமைந்தால்தான் இதுபோன்ற படத்தை எடுக்க முடியும்.இந்தப்படத்தில் எல்லாமே கூடிவந்தது.ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசியவிருது அறிவிக்கப்படும்போது நான்,இயக்குநருடன் திருவண்ணாமலையில் இருந்தேன். அந்த அறிவிப்பு வெளியானபோது அந்தநாள் எப்படி இருந்தது என நியாபகம் இருக்கிறது.இதே பிரசாத் லேபில்தான் அதற்கும் பிரஸ்மீட் நடந்தது.அந்தப்படத்திற்கும் ட்ரீம் வாரியர்ஸ் ப்ரொடக்ஷன்,தற்போது இந்தப்படத்திற்கும் ட்ரீம் வாரியக்ஸ் ப்ரொடக்ஷன் ரிலீஸ் செய்வதை ஒரு பேட்டர்னாக பார்க்கிறேன்.எனது எதிர்கால படங்களுக்கம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன்.கனடாவில் இருக்கும் திலானியை நான் மிஸ் செய்யக்கூடாது.அவர்கள்தான் இந்தகதையை முதலில் தேர்வு செய்தார்கள்.இந்த வீடியோவை பார்த்து அவர்கள் பெருமை கொள்வார்கள் என நினைக்கிறேன். பிப்ரவரி27ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.இப்படியொரு திரைப்படம் யூடியூபில் வெளியாகும்போது அதற்கான வியூஸ்கள் அதிகரிக்க,உங்களை போன்ற ஊடகத்தினர் மட்டுமே செய்யமுடியும்.இதை நீங்கள் எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன்.
இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் மருது.அவரின் முயற்சியை நீங்கள் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியையும் மிகநுட்பமாக பார்த்து பார்த்து பதிவு செய்தார்.அவர் கணிதரீதியாக மிகச்சரியாக பணியாற்றியதே காட்சிகள் தரமாக வருவதற்கு காரணமாக அமைந்தது.பல பெரிய ஒளிப்பதிவாளர்கள், படத்தின் காட்சிகளை பார்த்தபிறகு,இதற்கு கிரேடிங் செய்யாதீர்கள் என்று கூறினர்.மற்றொரு ஒளிப்பதிவாளரான மீனாட்சி சோமன் பற்றி கூற வேண்டும்.மருது மற்றும் மீனாட்சி இருவரும் தனித்தனி கேமராவில் படமாக்கினர்.எனினும்,படத்தின் காட்சிகளுக்கு அதிக கிரேடிங் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.மருது தற்போது என்னுடன் இல்லை, அவருடனான கூட்டணி கதை எழுதியதில் இருந்து படம் நிறைவுபெறும் வரையில் நீண்டது.அதேபோல் தற்போது காளிதாஸ் தோழரும் தற்போது நம்முடன் இல்லை. ஆனால்,இந்தப்படம் இருக்கப் போகிறது.இந்தப்படம் யூடியூப் இருக்கும்வரை இருக்கப்போகிறது.அவர்களின் நினைவாக இருக்கப்போகிறது.அவர்கள் இல்லை என்றாலும்,இங்குதான் இருக்கப்போகிறது.என்றார்.