தேசிய விருது பெற்ற “லிட்டில் விங்ஸ்”, திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, இது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு பார்வையாளர்களுக்காக வெளியிடப்படுகிறது. இதையொட்டி லிட்டில் விங்ஸ் குறும்படம் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து குறும்பட குழு செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் நவீன், நடிகை மணிமேகலை, நடிகர் ராம்ஜி, இயக்குநர் ராஜூமுருகன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர்.
குறும்பட இயக்குநர் நவீன் பேசும் போது,
இந்த குறும்படத்தை எழுத தொடங்கும்போது இந்த இடத்திற்கு வருவதற்கு திட்டமிடவில்லை.ஆனால், குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்லும் என்ற கனவு இருந்தது,விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. எல்லாபடமும் எழுத தொடங்கும் முன்பு ஒரு கேள்வி இருக்கும்.அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கும் போதுதான் கதை,திரைக்கதை அமைத்து படமாக முயற்சி செய்கிறோம்.அடிப்படையில் இந்தகதை கொரோனா காலக்கட்டத்தில்தான் எழுதப்பட்டது.
இதில் சேவல் இருக்கிறது,
விருது வென்றதால் பல சர்வதேச திரைப்பட விழாக்கள் சார்பாக எங்களை தொடர்பு கொண்டு படத்தை அனுப்பக் கோரினர்.இந்தப்படத்தை சரியாக கொண்டு சேர்க்க அதிக நேரம் ஆனது.
அதன்பிறகு மணிமேகலை அம்மா,காளிதாஸ் ஐயா என இருவரும் செட்டிற்கு வரும் முன்பே நடிப்பு பயிற்சி அளித்திருந்தோம்.
ஒலி வடிவமைப்பாளர்களான சுரேன் மற்றும் கூத்தன் அவர்கள் இங்கு வரவில்லை,வேறொரு ரெக்கார்டிங்கில் உள்ளனர்.கலரிஸ்ட் ரங்கா சார் இங்குதான் இருக்கிறார். இவர் பல பெரியபடங்களில் பணியாற்றி வருகிறார். எங்கள் இயக்குநர் குக்கூ படத்திற்கும் அவர்தான் கலரிஸ்ட்.நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகுழு என இந்த மாதிரி அமைந்தால்தான் இதுபோன்ற படத்தை எடுக்க முடியும்.இந்தப்படத்தில் எல்லாமே கூடிவந்தது.ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசியவிருது அறிவிக்கப்படும்போது நான்,இயக்குநருடன் திருவண்ணாமலையில் இருந்தேன். அந்த அறிவிப்பு வெளியானபோது அந்தநாள் எப்படி இருந்தது என நியாபகம் இருக்கிறது.இதே பிரசாத் லேபில்தான் அதற்கும் பிரஸ்மீட் நடந்தது.அந்தப்படத்திற்கும் ட்ரீம் வாரியர்ஸ் ப்ரொடக்ஷன்,தற்போது இந்தப்படத்திற்கும் ட்ரீம் வாரியக்ஸ் ப்ரொடக்ஷன் ரிலீஸ் செய்வதை ஒரு பேட்டர்னாக பார்க்கிறேன்.எனது எதிர்கால படங்களுக்கம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன்.கனடாவில் இருக்கும் திலானியை நான் மிஸ் செய்யக்கூடாது.அவர்கள்தான் இந்தகதையை முதலில் தேர்வு செய்தார்கள்.இந்த வீடியோவை பார்த்து அவர்கள் பெருமை கொள்வார்கள் என நினைக்கிறேன். பிப்ரவரி27ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.இப்படியொரு திரைப்படம் யூடியூபில் வெளியாகும்போது அதற்கான வியூஸ்கள் அதிகரிக்க,உங்களை போன்ற ஊடகத்தினர் மட்டுமே செய்யமுடியும்.இதை நீங்கள் எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன்.
இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் மருது.அவரின் முயற்சியை நீங்கள் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியையும் மிகநுட்பமாக பார்த்து பார்த்து பதிவு செய்தார்.அவர் கணிதரீதியாக மிகச்சரியாக பணியாற்றியதே காட்சிகள் தரமாக வருவதற்கு காரணமாக அமைந்தது.பல பெரிய ஒளிப்பதிவாளர்கள், படத்தின் காட்சிகளை பார்த்தபிறகு,இதற்கு கிரேடிங் செய்யாதீர்கள் என்று கூறினர்.மற்றொரு ஒளிப்பதிவாளரான மீனாட்சி சோமன் பற்றி கூற வேண்டும்.மருது மற்றும் மீனாட்சி இருவரும் தனித்தனி கேமராவில் படமாக்கினர்.எனினும்,படத்தின் காட்சிகளுக்கு அதிக கிரேடிங் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.மருது தற்போது என்னுடன் இல்லை, அவருடனான கூட்டணி கதை எழுதியதில் இருந்து படம் நிறைவுபெறும் வரையில் நீண்டது.அதேபோல் தற்போது காளிதாஸ் தோழரும் தற்போது நம்முடன் இல்லை. ஆனால்,இந்தப்படம் இருக்கப் போகிறது.இந்தப்படம் யூடியூப் இருக்கும்வரை இருக்கப்போகிறது.அவர்களின் நினைவாக இருக்கப்போகிறது.அவர்கள் இல்லை என்றாலும்,இங்குதான் இருக்கப்போகிறது.என்றார்.