நடிகர்கள் சம்பளம் குறைக்கப்படும் – ராமசாமி முரளி

நவம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடவுள்ள ‘தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர் ராமசாமி முரளி மற்றும் துணைதலைவர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாக்குழு வேட்பாளர்கள் மதுரையிலுள்ள தயாரிப்பாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைவர் வேட்பாளர் ராமசாமி@ முரளி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதிநிலை மோசமாக உள்ளது, நிறைய திரைப்படங்கள் திரையிட முதற்கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். முன்னணி நடிகர்களின் சம்பள குறைப்பு குறித்து இனி தேர்ந்தெடுக்கப்படும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் சங்க நிர்வாகிகளை ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளோம் என்று தெரிவித்த அவர், சிறிய பட்ஜெட் படங்களை திரையிடுவதற்கும் பிரச்சனைகள் உள்ளதுஇதற்கு தீர்வு காணவுள்ளோம் என்றார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அரசியல் தலையீடு கிடையாது , கடந்த 10ஆண்டுகளாக VPF கட்டணம் கட்டிய நிலையில் இனி கட்டபோவதில்லை எனவும், நாங்கள் வெற்றிபெற்றால் நலிந்த மற்றும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முயற்சி எடுக்கவுள்ளோம் எனத் தெரிவித்தார்.
ஏராளமான படங்கள் திரையிடாமல்  முடங்கி கிடப்பதால் அதனை வெளியிட முயற்சி மேற்கொள்வோம்.ஓடிடி மாற்றுஏற்பாட்டிற்கான தளம் தான் திரையரங்கம் தான் முக்கியம், இன்றைய சூழலில் ஓடிடி சரியானது, தென்னிந்திய சினிமாவில் கார்ப்பரேட் தலையிட வாய்ப்பில்லை என்றார்.
actors salaryramasamy murali
Comments (0)
Add Comment