சிம்ரன் பெயரில் புதிய படம் தொடக்கம்

லார்க் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’.

இந்தப் படத்தில் நடிகர் ‘மிர்ச்சி’ சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ் இருவரும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா.கா.பா.ஆனந்த், ஷா ரா, ‘மொட்டை’ ராஜேந்திரன், ‘கல்கி’ ராஜா, கே.பி.ஒய்.பாலா, ‘மைக்செட்’ அபினாஷ், நடிகை வித்யா வினுமோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி.துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை நடன  இயக்குனர் சாண்டி அமைக்க, சண்டை பயிற்சியை ஃபீனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநரான பி.என்.விக்னேஷ் ஷா இயக்குகிறார்.
ஃபேண்டசி காமெடி ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (20.09.2021)சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

படத்தின் தலைப்பு வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் இன்றைய தலைமுறையினரை இலக்காக கொண்டு வைத்திருக்கின்றனர் வியாபார ரீதியாக இது எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது

#simran
Comments (0)
Add Comment