ராதேஷ்யாம் வசூல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

மார்ச் 11 ஆம் தேதி உலகம்
முழுவதும் வெளியான ‘ராதே ஷ்யாம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக இப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பாராட்டுக்களை பெற்றதுகைரேகை நிபுணராக  பிரபாஸ். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கஆஸ்ட்ரோ த்ரில்லர் மற்றும் காதல் கதைக்களத்துடன் வெளியான இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிகர் சத்யராஜ், பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.பான்–இந்தியா ஸ்டார் என ‘பாகுபலி1,2 படங்களின் மூலம் பிரபலமான பிரபாஸ், ‘சாஹோ’ படத்தின் மூலம் இந்தியில் வசூல் சாதனை நிகழ்த்தினார் பிறமொழிகளில் அப்படம் தோல்வியை தழுவியது. இருந்தபோதிலும்ராதேஷ்யாம்’ படத்தை சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 200 கோடி ரூபாய் அளவிற்கு தியேட்டர் வியாபாரம் நடைபெற்றது. இந்தியில் மட்டும் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 25 கோடி வசூலைத் தாண்டுவதற்கே படம் தடுமாறுவதாக கூறப்பட்டது
ஒரு வாரம் முன்பு படத்தின் வசூல் 150 கோடியைக் கடந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின்  வசூல் விவரங்களை வெளியிடவில்லை.எனவே படம் பிளாப் என இணையத்தளங்களில் செய்தி வெளியாக தொடங்கியது
படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை
சுமார் 100 கோடிக்கும் அதிகமாக இப்படத்தின் மூலம் நஷ்டம் வரும் என்று கூறப்பட்டு வந்த நிலையில்.
ராதே ஷ்யாம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக படத்தின் வசூலை அறிவித்துள்ளனர்
கடந்த 10 நாட்களில்  தியேட்டர் மூலமாக மட்டும்204 கோடி ரூபாய் வசூல் ஆகியிருப்பதாகவும் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் ரூ.200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது வணிகரீதியாக  இதுவரை ‘ராதே ஷ்யாம்’ 400 கோடியை கடந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.