பெத்தண்ணாவாக மாறிய அண்ணாத்த

சிறுத்தைசிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த சன் பிக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும்நவம்பர் 4-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதே நாளில் வேறு படங்களும் வெளிவர உள்ளது அதனால் தயாரிப்பு தரப்பில் இருந்து அண்ணாத்த  படத்தின் விளம்பர வேலைகள், வியாபார பணிகள்

தற்போது தொடங்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சன் பிக்சர்ஸ் நேரடியாக வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது
அண்ணாத்த படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை சமீபத்தில் லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தை தயாரித்து வெளியிட்ட ஆசிய நாரங் வாங்கியிருக்கிறார்.
இவர்தான் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தையும் தயாரிக்கப் போகிறார். தெலுங்கு பதிப்பிற்கு பெத்தண்ணா என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான கபாலி, பேட்ட, தர்பார் போன்ற படங்கள் ஆந்திராவில் வசூல் அடிப்படையில் தோல்வியை தழுவியது இதனால் முந்தைய படங்களின் விலையை காட்டிலும் குறைவாக அண்ணாத்த படத்தின் தெலுங்கு உரிமை வியாபாரம் விற்பனை செய்யப்படுள்ளது