கைவிட்ட அரவிந்தசாமி கைகொடுத்த மணிரத்னம்

அஜீத் நடித்த அமராவதி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்செல்வா அதனை தொடர்ந்து ஏராளமான படங்களை இயக்கிய இவர் இயக்கத்தில் நாங்க என்ற படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை

2017 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் வணங்காமுடி என்கிற படத்தைத் தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது.

இந்தப்படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை படம் முடியுமுன்பே கேட்டிருக்கிறார் அரவிந்த்சாமி. அதைத் தரவில்லை என்பதால் குரல்பதிவு உட்பட எந்த வேலைக்கும் அரவிந்த்சாமி ஒத்துழைக்கவில்லை

ஏற்கெனவே தொடங்கப்பட்ட சில படங்கள் நடக்கவில்லை என்கிற சோகத்தில் இருந்த இயக்குநர் செல்வாவுக்கு வணங்காமுடி திருப்புமுனையாக இருக்கும் என்று பெரும் நம்பிக்கையுடன் இருந்தார்
சம்பள பாக்கி காரணமாக படவேலைகளை முடிக்க முடியாமல் முடங்கிபோனதால்மிகவும் நொந்துபோயிருந்த இயக்குநர் செல்வாவுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

இணையதள நிறுவனத்துக்காகச் சில குறும்படங்களைத் தயாரித்துத் தரும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் மணிரத்னம்.அவற்றில் ஒரு குறும்படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் செல்வாவைக் கூப்பிட்டுக் கொடுத்திருக்கிறாரார் இயக்குனர்மணிரத்னம்.
அரவிந்த்தசாமி கைவிட்டதால் நொந்துபோய் சோர்ந்திருந்த இயக்குநர் செல்வா
மணிரத்னம் வழங்கிய வாய்ப்பால் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.