அசத்திய சரவணா அண்ணாச்சி அரண்டு போன படக்குழு

அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்படங்களை இயக்குபவர்களுமான ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது.
இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கவுள்ளனர் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் நடந்திருக்கிறது. ஒரு பாடல் மற்றும் இரண்டு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம்.
அனலரசு சண்டைப்பயிற்சியில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சிகளைத் தொகுத்துப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டாராம் அருள். சண்டைகள் மிகப் பிரமாதமாக வந்திருக்கின்றன என்று அனலரசுவைப் பாராட்டித் தள்ளிவிட்டாராம். அதோடு இன்னொரு சண்டைக்காட்சியையும் படத்தில் வைக்குமாறு கேட்டிருக்கிறாராம்.
அதேபோல் பாடல் காட்சியும் நன்றாக வந்திருப்பதால் மகிழ்ச்சிய்டைந்த அருள் அடுத்து சொன்னதுதான் உச்சம்.
ஒரு நடிகராக வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இவற்றைப் பார்க்கும் போது விஜய் அஜீத் ஆகியோர் லெவலுக்கு உயர முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்தப்படத்தின் வியாபாரம் விளம்பரம் ஆகிய எல்லாம் அந்த லெவலில் இருக்கவேண்டும். அதோடு அடுத்து யாராவது கதை சொல்வதென்றால் அந்த ரேஞ்ச் கதையாக இருந்தால் மட்டும் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறாராம்.இதனால் படக்குழுவினர் அரண்டு போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது