அடங்காத அதர்வா சமரசமான இயக்குனர்

தமிழ்சினிமாவில் ஒரே ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார் மறைந்த நடிகர் முரளியின் சினிமா வாரிசு அதர்வா இங்கு திறமை கடந்து அதிர்ஷ்டம் என்பது முக்கியமாக கருதப்படுகிறது அதர்வா மிகச் சிறந்த நடிகன் என்பதை இயக்குனர் பாலா தான் இயக்கியபரதேசி படத்தில் நடிக்க வைத்துநிரூபணம் செய்தார்

 இருந்தபோதிலும் அதர்வா நடித்த அடுத்தடுத்த படங்கள் அவரது தலையீட்டால், மோசமான கதை தேர்வுகளால்மிகப் பெரும் தோல்வியைத் தழுவி வருகிறது
 இந்நிலையில்  இயக்குனர் பூபதி பாண்டியன் உதவியாளர் ரவீந்திர மாதவா அதர்வா காவல்துறை அதிகாரியாகநடிக்கும் படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்

இந்தப்படத்தில் அதர்வாவுடன் ஜோடியாக நடிப்பதற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்றது அதை முடிவு செய்ய வேண்டியது படத்தின் இயக்குனர் என்றாலும்தமிழ்சினிமாவில் கதாநாயகர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே கதாநாயகிகள் முடிவு செய்ய வேண்டும் இல்லை என்றால் படப்பிடிப்பின்போது தேவையாற்ற சங்கடங்கைளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அறிமுக இயக்குனர்கள்என்பது எழுதப்படாத சட்டமாக தமிழ் சினிமாவில்இருந்து வருகிறது
அதர்வாவுக்கு கதைசொல்லிஇரண்டு வருடமாக காத்திருந்த அறிமுகஇயக்குனர் வாய்ப்பு கைநழுவி போய்விடக்கூடாது என்பதற்காக பொறுமையாக 70 மாடல் அழகிகளின் புகைப்படங்களை காண்பித்தும் அனைத்தையும் நிராகரித்து வந்துள்ளார் நடிகர்அதர்வா
தற்போது அதர்வா விரும்பியபடி நடிகை லாவண்யா திரிபாதியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர்.