கவிஞரை பாராட்டிய இசையமைப்பாளர் ரஹ்மான்

இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி அதை தனது ஒய்.எம் மூவிஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் ‘99 சாங்ஸ்’.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.

நான் தயாரித்து, எழுதியிருக்கும் முதல் படமான ’99 சாங்ஸ்’ (99 Songs) என்கிற உணர்வுப்பூர்வமான காதலை அடிப்படையாகக் கொண்ட மியூசிக்கல் படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

எனது தயாரிப்பு நிறுவனமான எய்.எம் மூவிஸ், ஜியோ ஸ்டுடியோ உடன் இந்தப் படத்தின் வெளியீட்டில் இணைந்துள்ளன.

’99 சாங்ஸ்’ திரைப்படம் சர்வதேச அளவில், இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் 21 ஜூன் 2019 அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.ஆனால் இன்னும் படம் வெளியாகவில்லை.

இப்படத்தில் இடம்பெறும் 12 பாடல்கள் இந்தியில் வெளியாகியிருக்கின்றன.அவற்றில் தேரி நஸீர் என்கிற பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.

அந்தப்பாடலைக் குறிப்பிட்டு,தினமும் 50 முறைக்கு மேல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடலைத் தமிழில் கேட்க ஆசை என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் கபிலன் இந்தப்பாடலை மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறார்.இந்திப்பாடலில் இருந்து மாறுபட்டதாக அப்பாடல் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்தப் பதிலால் பாடலாசிரியர் கபிலனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அந்தப்பாடலுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.