விஜய் ரசிகர்களை பயமுறுத்தும் பீஸ்ட் டிரைலர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் சற்று முன்னர் யு டியூபில் வெளியானது. இப்படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்களான ‘அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா’ ஆகிய பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘பீஸ்ட்’ டிரைலர், யூ டியூப் பார்வை எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு ஷாப்பிங் மாலுக்குள் மக்கள் பலரை தீவிரவாதிகள் கடத்தி வைத்திருப்பார்கள். அந்த மாலுக்குள்ளேயே செக்யூரிட்டி வேலை பார்க்கும் யோகி பாபு எப்படி காப்பாற்றுகிறார் என்று நகைச்சுவையாகச் சொன்ன படம்தான் கூர்க்காயோகி பாபு நடித்து 2019ல் வெளிவந்த இந்த
படத்தின் கதையை நினைவூட்டுகிறது டிரைலர்பீஸ்ட் படத்தில் அதே மால், அதே மக்கள், அதே செக்யூரிட்டி, கூர்க்கா யோகி பாபுவுக்குப் பதில் சோல்ஜர் விஜய். இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் ‘கூர்க்கா’ படத்தில் கதாநாயகனாக நடித்த யோகி பாபு,பீஸ்ட் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.பீஸ்ட் படத்தின் முழு கதையும் இந்த மாலுக்குள்ளேயே தான் நகரும் போலிருக்கிறது. டிரைலரின் ஆரம்பமே மிகச் சாதாரணமாக இருக்கிறது. எந்த ஒரு அதிரடியும் இல்லை. விஜய்யின் ஆக்க்ஷன் காட்சிகள் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கலாம். டிரைலரில் ‘பயமா இருக்கா, இதைவிட இன்னும் பயங்கரமா இருக்கும்” மற்றும் ஐயாம் எ சோல்ஜர்என்ற இரண்டே வசனங்களைத்தான் பேசுகிறார் விஜய். டிரைலர் முழுவதிலும் செல்வராகவன் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்டிரைலரில் நாயகி பூஜா ஹெக்டே, துணை நடிகை போல ஒரே ஒரு காட்சியில்தான் வந்து போகிறார். டிரைலரில் ஒரே ஒரு பாடல் ஒலிக்கிறது. அனிருத்தின் பின்னணி இசையிலும் வேகம் இல்லை விஜய் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் டிரைலர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இல்லாமல் பயமுறுத்துவதாகவே உள்ளது.