புதிய கதை தேடும் கே.எஸ்.ரவிக்குமார்

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகியோர்
முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் என்கிற புதிய திட்டத்தில் இப்படம் தயாராகிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப்படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிகுமார். நாயகன் சத்யராஜ்.கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது.

இந்தப்படத்தின் கதையை வெங்கட்சுபா எழுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் ஒரு தெலுங்குப்படத்தின் மொழிமாற்று என்றொரு செய்தியும் வந்தது.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்த நாகேஸ்வர ராவ் நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற படமொன்றைத்தான் இக்காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் படமாக எடுக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இக்கதை தொடர்பாக தன் உதவியாளர்களுடன் விவாதித்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இந்தக்கதையைப் படமாக்கினால் சரியாக வராது என்று சொல்லி நிராகரித்துவிட்டாராம்.

அதேசமயம், சத்யராஜ் விஜய்சேதுபதி ஆகியோரை மையப்படுத்தி பொருத்தமான கதையத் தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

வேறுமொழிப்படங்கள் சிலவற்றைப் பரிந்துரைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.