நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்தவுடன் நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஏமாற்றுபவர்கள் எப்போதும் முன்னேறுவதில்லை என்று என் ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.
சித்தார்தின் டிவீட் சமந்தாவை குறிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் சில காலம் காதலில் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் ஏற்கனவே கூறப்பட்டு வந்தது
சித்தார்த் வெளியிட்ட அந்தப் பதிவிற்கு பல கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சித்தார்த் தன் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார்.
மேலும் தனது டிவீட்களை தேவையற்ற சர்ச்சைகளுக்குள் இழுத்து பெரியதாக ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.