விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே,கந்தசாமிஉட்பட தான் இயக்கிய ஒவ்வொரு படங்களையும் வித்தியாசமான கதைக் களத்தில் கொடுத்து தனது தனித்துவத்தை நிரூபித்தவர் இயக்குநர் சுசி கணேசன்.
வெளிப்படை தன்மைக்காக, அனைவருக்கும் கோட் நம்பர் கொடுக்கப்பட்டு, இணையத்தளத்தில் அனைவரது போட்டோக்களும் வெளியிடப்பட்டன. அவர்களில் இருந்து அடுத்தகட்ட தேர்வுக்கு தயாராகும்விதமாக 540 நபர்களை படக் குழு இறுதி செய்துள்ளது,
தங்களது விருப்பமான சூழ்நிலைகளை மையப்படுத்தி தங்களை பற்றிய சுய விபர வீடியோக்களை அனுப்பியிருக்கும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்தக் கட்டமாக ஒரு எழுத்துப் போட்டியை முன் வைத்துள்ளார் சுசி.கணேசன்.ஒரு காட்சியின் வசனப் பிரதி அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அந்த வசனங்களுக்கேற்றவாறு நடித்து அதை வீடியோவில் பதிவாக்கி அனுப்பி வைக்க வேண்டுமாம்.
இயக்குநர் சுசி கணேசனின் எதிர்பார்ப்பு என்ன என்பதும், ஆர்வமிக்க நடிகர்கள் அவரது எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யப் போகிறார்கள் என்பதுமான இந்த ஆடிஷன் உண்மையிலேயே தமிழ்த் திரையுலகில் புது முயற்சி என்றே சொல்லலாம்.