இந்தி, தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகைகங்கனா ரணாவத். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி நாடாளுமன்றதொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று.இருக்கிறார். இவர், இயக்கி, நடித்து தயாரித்துள்ள ‘எமர்ஜென்சி’ படம் செப்டம்பர்.6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் சட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்பு, சீக்கிய அமைப்புகளின் மிரட்டல், காரணமாக மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதை தாமாதப்படுத்தியது. அதனால் அறிவிக்கப்பட்ட படி படம் வெளியாகவில்லை.

இந்தப் படத்தை தனது முழு சொத்தையும் விற்று எடுத்திருப்பதாக பல நேர்காணல்களில் கங்கனா ரணாவத் கூறி வந்தார்
இந்த நிலையில் அவர், மும்பை பாந்த்ரா அருகில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை 32 கோடிக்கு விற்பனை செய்து உள்ளார். இதனை கோவையை சேர்ந்த தொழிலதிபர் சுவேதா என்பவர் வாங்கியுள்ளார். மொத்தம் 3,075 சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், ஜிம் வசதிகள் உள்ளன. இந்த பங்களாவை 6 வருடத்திற்கு முன்பு 20 கோடிக்கு வாங்கியிருந்தார் கங்கணா . பாஜக ஆதரவளாரன கங்கனா மகாராஷ்ரா மாநிலத்தை ஆண்ட சிவசேனா அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் தீவிரமாக கருத்துக்களை வெளியிட்டு வந்ததால்பங்களாவை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இன்றி கட்டியிருப்பதாக கூறி முன்பகுதியை இடித்தார்கள். இதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கங்கனா ரணாவத். இந்த வழக்கில் அப்போது அவருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.