டி.ராஜேந்தர் கூறிய கதை பிடித்து போனதால், ‘ஒருதலை ராகம்’ படத்தை தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் சில நிபந்தனைகளும் டி.ராஜேந்தருக்கு விதிக்கப்பட்டது. கதை, திரைக்கதை, வசனம், இசை போன்ற பணிகளை டி.ராஜேந்தர், செய்தாலும் படத்தை நான்தான் இயக்குவேன் என்றார் இம்ராஹிம். இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார் டி.ராஜேந்தர்.
ஆனால் சினிமாவில் எவ்வித அனுபவமும் இல்லாததால், இம்ராஹிம் மால் படத்தை இயக்க முடியவில்லை அதனால் படத்தை நான் இயக்கி தருகிறேன், நீங்கள் உங்கள் பெயரை போட்டு கொள்ளுங்கள் என கூறி, டி.ராஜேந்தர் இந்த படத்தை இயக்கி முடித்தார்.