கர்ணன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

0
38
கலைப்புலி தாணு தயாரிப்பில்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படம் ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டில் நடைபெறும் நியூ ஜெனரேஷன் இன்டிபென்டன்ட் இன்டியன் ஃபிலிம் பெஸ்டிவலில்திரையிடதேர்வு செய்யப்பட்டுள்ளது

‘பரியேரும் பெருமாள்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தன்னுடைய இரண்டாவது படைப்பாக தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ்.

ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி, அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றது இந்தப்படம்.
இந்நிலையில் ‘கர்ணன்’ படம் ஃப்ராங்க்பர்டில் நடக்கும் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
கர்ணன்’ படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானதுஇந்தப்படத்தில் தனுஷுடன் , ராஜிஷா விஜய், யோகி பாபு, லால், கெளரி, பூ ராம், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்
விமர்சனரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாவும் இந்தப்படம் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது
கொரோனா அச்சத்தையும் கடந்து திரையரங்குகளில் கர்ணனுக்கு பெருமளவு ரசிகர்கள் திரண்டனர்.
வசூல் சாதனை நிகழ்த்தவேண்டிய கர்ணன் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையிடப்பட்ட
இரண்டு வாரங்களிலேயே திரையரங்குகள் மூடப்பட்டது
இதனால் படத்தை திரையரங்குகளில் தொடர்ந்து பார்க்கும் வசதி இல்லாமல் போனதுஅதனை தொடர்ந்து ஓடிடியிலும் கர்ணன் படம் வெளியானதும். சப் டைட்டில் உதவியுடன் இந்தியாவின் பிற மொழி ரசிகர்களையும் படம் சென்றடைந்தது
இந்திய அளவில் ‘கர்ணன்’ படத்திற்கு பல விமர்சனங்கள் எழுதப்பட்டன. இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் ‘கர்ணன்’ படத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டில் நடைபெறும் நியூ ஜெனரேஷன் இன்டிபென்டன்ட் இன்டியன் ஃபிலிம் பெஸ்டிவலில்  கர்ணன் படம் திரையிடுவது சர்வதேச அங்கீகாரத்துக்கு இணையானது என கூறப்படுகிறது  இந்த செய்தியை படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here