வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் கசியவிடப்பட்டுள்ளது
சினிமாவில் ரீ என்ட்ரி ஆகியுள்ள வடிவேலுவுடன் ஷோபாவில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படத்தை ‘தட் லக்கி கேர்ள்’ என்ற கேப்ஷனோடு பகிர்ந்திருந்தார் ப்ரியா பவானி சங்கர்.