அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்து லம்போர்கினி கார் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படமும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இளைய மகள் சவுந்தர்யா, மருமகன் மற்றும் பேரனுடன் இருப்பது போன்ற புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது. அதுபோலவே அப்பகுதியில் ரஜினி வாக்கிங் செல்லும் சில வினாடி வீடியோவும் வெளியானது.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில்,
போயஸ் கார்டனில் உள்ள வீட்டில்வசித்து வரும் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா என்ற கேள்வி எழுந்து ,சமூகவலைதளங்களில் விவாதமானதுஇதுகுறித்து ஆய்வு செய்தே பதிலளிக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்தின் இ-பாஸும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இன்றைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பே ரஜினிகாந்த் கேளம்பாக்கம் சென்று, அங்கேயே தங்கியுள்ளது எப்படி என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது