இந்திய தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி
Related Posts
தொடங்கியது முதல் தமிழில் நடிகர் கமல்ஹாசன்தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில் நாகார்ஜூனா படப்பிடிப்பு காரணமாக தெலுங்கில் ஒளிபரப்பாக இருக்கும் 6வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு பதிலாக நடிகை சமந்தா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.