தமிழ் சினிமாவில் இவர் நடித்து வெளிவரும் படங்கள் படைப்புரீதியாக அல்லது வசூல் அடிப்படையில் வெற்றிப்படங்களாகி வருகிறது அதனால் இவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முட்டிமோதி வருகிறார்கள் ஆனால் அவரோ தான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனரை யாரும் எதிர்பாராத நிலையில்அறிவித்துஆச்சர்யத்தையு
ஒரே இயக்குனரின் இயக்கத்தில் அடுத்தடுத்து தனுஷ் இதுவரை நடித்தது இல்லை அந்த அதிசயம் மாரிசெல்வராஜ் விஷயத்தில் நடந்திருக்கிறது இதற்கு காரணம் “கர்ணன்” பாக்ஸ்ஆபீஸ் வெற்றியா அல்லது படைப்பு ரீதியான விமர்சனங்களா என்றால் இல்லை என்கிறது தனுஷ் வட்டாரம்
நடிகர் தனுஷ் ரஜினிகாந்த் நடிக்க ரஞ்சித் இயக்கத்தில் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில்தயாரித்த படம் “காலா”ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்த படங்களின் மூலம் ஏற்பட்ட நிதிச்சுமைகளை முடித்தால் மட்டுமே காலா படத்தை வெளிகொண்டுவர முடியும் என்கிற சூழலில் அவருக்கு உதவி செய்ய முன் வந்தார் கலைப்புலிதாணு அவரது தயாரிப்பில் 3 படங்கள் நடிக்க கால்ஷீட் கொடுத்ததன் மூலம் தனுஷ் நிதி கடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது 2018ம் ஆண்டு வெளியான வட சென்னை, மாரி – 2 ஆகிய படங்கள் வெற்றிபெற்ற சூழலில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் அசுரன் வெளியானது நடிகர் தனுஷ் நடிகராகவும், வணிகரீதியாகவும் உச்சம் தொட்ட படமாக அமைந்தது
Related Posts
அந்த சூழலில் பரியேறும் பெருமாள் வெற்றியின் மூலம் கவனிக்கப்பட்ட மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடிக்க முடிவெடுத்து அந்த வாய்ப்பைதாணுவுக்கு வழங்கினார் தனுஷ் கர்ணன் வர்த்தகரீதியாக தயாரிப்பாளருக்கு கொரானா நெருக்கடியிலும் 10 நாட்களில் அபரிமிதமான லாபத்தை பெற்று தந்த படமாக அமைந்தது இதன் காரணமாக வெற்றிபெற்ற இயக்குனரின் மூலம் அடுத்த படத்தை தயாரிக்க ஆசைப்பட்ட கலைப்புலி தாணு மாரிசெல்வராஜ் மூலம் அதற்கான முயற்சியை தொடங்கினார் விஜய்க்கு நெருக்கமானவர்கள் அவருக்கு கதை இருக்கிறதா என கேட்க தொடங்கியதாக கூறப்படுகிறது இருந்தபோதிலும் தாணுவுக்கு அடுத்து ஒரு படம் இயக்கமாரிசெல்வராஜ் ஒப்புக்கொண்டாலும் தனுஷ் கால்ஷீட் வாங்குவது யார் என்கிற கேள்வி எழுந்தது கலைப்புலிதாணுவுக்கு ஒப்புக்கொண்டபடி மூன்றாவது படம் செல்வராகவன் இயக்கத்தில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால்தாணு உடனடியாக மீண்டும் ஒரு கால்ஷீட் கேட்பது நாகரிகமாக இருக்காது என்பதால் அந்தப் பொறுப்பு மாரிசெல்வராஜ்வசம்ஒப்படைக்கப் பட்டது ஒரு பக்கம் விஜய் தரப்பு துரத்தி கொண்டிருக்க தாணுவை துறக்க முடியாத மாரிசெல்வராஜ் தனுஷ் தரப்பின் கவனத்திற்கு விஷயத்தை சொன்னபோது தனுஷ்வெளியிட்ட அதிரடி அறிவிப்புதான்மாரிசெல்வராஜ் உடன் அடுத்த படத்தில் இணைவதாக
தயாரிப்பாளர் யார்? எப்போது தொடக்கம் என்பது குறிப்பிடப்படாத அறிவிப்புக்கு காரணம் மாரிசெல்வராஜ், தனுஷ் இருவரும் கலைப்புலி தாணுவின் நெருக்கடியில் இருந்து விடுபடவேஎன்கிறது தனுஷ் தரப்பில் நிதி நெருக்கடியில் இருந்தபோது குறைவான சம்பளத்திற்கு மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார் தனுஷ் அதில் இரண்டு படங்கள் மெஹா ஹிட்டாகிவிட்டது மூன்றாவது செல்வராகவன் இயக்கும் படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது
வியாபார முக்கியத்துவம், வெற்றி படங்களின் நாயகனாக இருப்பவர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு தொடர்ந்து படங்கள் நடிப்பது சரியான முடிவாக இருக்காது தன்னை வைத்து கடந்த காலங்களில் படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என தனுஷ் விரும்புகிறார். கஷ்டநேரத்தில் உதவியகலைப்புலி தாணுவிடம் இதனை நேரடியாக கூற முடியாமல் மறைமுகமாக அவருக்கு உணர்த்த அறிவிக்கப்பட்டதே மாரிசெல்வராஜ் – தனுஷ் கூட்டணி இணைவதாக கடந்தகால வெற்றியின் பலன்களை அறுவடை செய்ய தனுஷ் ஆசைப்படுவதால் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தை தனுஷ் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது