நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு கதாபாத்திரம் பேரழகு.வயதுக்கு மீறிய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்.அவருடைய வசன உச்சரிப்புகள் ரசிக்க வைக்கின்றன.
சூர்யாவின் தாயாக நடித்திருக்கும் ராதிகாவின் தேர்ந்த நடிப்பு,அவருக்கு நற்பெயர் பெற்றுத்தருவதோடு படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.
ரவீனாடண்டன் கதாபாத்திரம் மிகமுக்கியமானது.அதற்குப் பொருத்தமாக அவர் இருக்கிறார்.
ராஜிவ்மேனன்,சுனில்ரெட்டி உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பின் மூலம் திரைக்கதைக்கு வலுவூட்டியிருக்கிறார்கள்.
நிமிஷ்ரவியின் ஒளிப்பதிவில்,படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது திரையில் தெரிகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகமேபின்னணி இசை படத்தை முன்னணிக்குக் கொண்டுவந்திருக்கிறது.
நவின்நூலி படத்தொகுப்பில் முதல்பாதி போவதே தெரியவில்லை,அதனுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி குறைவு.
எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கி அட்லூரி.திருமண உறவுகளில் இருக்கும் சிக்கல்கள் காரணமாக அதைவிட்டு விலகி ஓடும் கதாநாயகனை மையமாக வைத்துக் கொண்டு உறவுகள் குறித்து பெரியபாடமேஎடுத்திருக்கிறார்.