தமிழில் லெஸ்பியன் படம்

ஆங்கிலப்படங்களில்தான் லெஸ்பியன் சம்பந்தமான கதைகள் அதிகமாக வெளிவரும். இப்போது தமிழிலும் வெளிவரத் தொடங்கி உள்ளது.தற்போது அந்த வகையான கதையில் தயராகி உள்ள படம் ‘அந்தகா’.

கந்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதுமுகங்களை வைத்து இயக்குநர் ஜேம்ஸ் கிரண். ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ரியாஸ், மனோஜ், ஜேம்ஸ் கிரண், ஆஷிகா, ஜெனிபர் ரேச்சல், பூஜா ஷர்மா ஆகியோர் முக்கிய தாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். செந்தமிழ் இசையமைத்துள்ளார். பிரசாந்த் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.இயக்குநர் ஜேம்ஸ் கிரணே இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் கிரண்.ஜி. பேசுகையில், அந்தகா என்றால் சமஸ்கிருதத்தில் இருளின் அரசன்என்று பொருள்.

ஒரு சராசரியான நபராக இருக்கும் மனிதன், தான் விரும்பிய சிறிய விசயங்களைகூட அடைய முடியாதபோது, அதை அடைய, எதையும் செய்யலாம் என்று முயற்சி செய்கிறான். அதன் விளைவு சைக்கோவாக மாறுகிறான். அப்படியான ஒரு மனிதனின் கதைதான் இந்த படம்.

இந்தப் படத்தில் வில்லன் இருட்டிலேயே இருப்பார். ஹாரர், காமெடி பாணியில் பயணிக்கும் இப்படம் ஒரு சைக்கோ திரில்லராக இருக்கும்.இவற்றின் ஊடாக ஒரு லெஸ்பியன் தம்பதிகளின் கதையும் இருக்கிறது. அதன் வாயிலாக லெஸ்பியன் பெண்களின் உணர்வுகளையும் படத்தில் பேசி இருக்கிறோம்…” என்றார்.

சென்னையின் ஈ.சி.ஆர் பகுதிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Attachments area