தெலுங்குப் படத்தில் இணையும் விஜய்- பிரகாஷ்ராஜ்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்தப்படம் முடிந்ததும் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை சமீபத்தில் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்..

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன் கேரக்டருக்கு நடிகர் செட்டாகிவிட்டால் அந்த ஜோடி அனைத்துப்படங்களிலும் தொடர்ந்து நடிப்பார்கள் இது எம்.ஜி.ஆர்.சிவாஜி காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது

கமல்ஹாசன், ரஜினிகாந்த் காலத்தில் எம்.ஜி.ஆர் காலத்திய P.S.வீரப்பா, அசோகன், எம்.என்.நம்பியார், R.S.மனோகர் போன்று வில்லன் கதாபாத்திரத்துக்கு நடிகர்கள் அமையவில்லை ரஜினிகாந்த்துக்கு ரகுவரன் செட்டானது போல் கமல்ஹாசனுக்கு யாரும் செட்டாக முடியவில்லை ரகுவரன்-ரஜினிகாந்த் கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றன ரகுவரனுக்கு பின் ரஜினிகாந்த்துக்கும் வில்லன் நடிகர்கள் இன்றுவரை செட்டாகவில்லை

அஜீத்குமார்-விஜய் காலத்தில் நிரந்தரமாக வில்லன் நடிகர்கள் செட்டாகவில்லை கில்லி படத்தில் முதன்முதலாக பிரகாஷ்ராஜ் விஜய்க்கு வில்லனாக நடித்தார் இவர்களது ஹீரோ-வில்லன் கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.. தொடர்ந்து சிவகாசி, போக்கிரி, வில்லு ஆகிய படங்களில் இணைந்து நடித்த இவர்கள் அதன்பிறகு இணைந்து நடிக்கவே இல்லை.  தற்போதுகிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இருவரும்இணைந்து நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.