டூப் போடாமல் வலிமையில் நடித்த அஜீத் குமார்

வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற சம்பவங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் இயக்குநர் வினோத் சண்டை காட்சியின்போது அஜீத் குமாருக்கு காயம் ஏற்பட்டதையும் அதையும் பொருட்படுத்தாமல் மறுநாள் படப்பிடிப்புக்கு புதிய பைக் ஏற்பாடு செய்ததையும் கூறியுள்ளார்

சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பார்வை,மற்றும் டீசர் வெளியானது
இந்த படத்தில் பல காட்சிகளில் அஜித் டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது இதுகுறித்து  இயக்குனர் வினோத் கூறியிருப்பதாவது,
படத்தில் மூன்று துரத்தும் சண்டைக் காட்சிகள் உள்ளன. ஐதராபாத்தில் புதிதாக போடப்பட்டு இன்னும் திறக்காத நெடுஞ்சாலையில் சேசிங் காட்சிக்காக படப்பிடிப்பு நடத்தினோம் ரோடு கல்லும் மண்ணும் ஆக இருந்தது. அப்போது ஒரு கட்டத்தில்  அஜித் கீழே விழுந்து விட்டார்.
வேகமாக வந்து விழுந்ததால் அஜித் கை, கால்கள் எல்லாம் காயம் ஏற்பட்டது. நான் இரண்டு கிலோ மீட்டருக்கு தள்ளி இருந்தேன். விஷயம் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியாகி அஜீத் இருந்தஇடத்துக்குப் போனேன். அப்போது அஜித் உடைந்து போன பைக்கையே பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் சார் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கேட்டேன். அதற்கு அவர் எனக்கு ஒன்றுமில்லை, பைக்தான் உடைந்துவிட்டது நாளைக்கு ஷூட்டிங்க்கு என்ன பண்றது என்று கேட்டார்.
ரைடிங் கியரை கழட்டிய பிறகுதான் அவருக்கு அடிபட்டிருக்கிறது என்று தெரியவந்தது.அப்புறம் அவர் யார் கிட்ட பேசினார், என்ன பேசினார் என்று தெரியாது. அடுத்த நாள் வேறு மாற்று பைக் வந்துவிட்டது.இவ்வாறு வினோத் கூறியுள்ளார்.