அண்ணன் தங்கைப் பாசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்திய சினிமாவில், தமிழ் சினிமாவில் வந்திருக்கும் ஆயிரக்கணக்கான படங்களில் உடன்பிறப்பே தன்னை இணைத்துக்கொண்டுள்ளது
சர்பத் குடிக்கிறதுன்னா கூட சட்டப்படிதான் குடிக்கணும் என்று சொல்லும் சமுத்திரக்கனி. அழுத்தமான வேடம் அமைதியான தோற்றம். ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
சசிகுமாரின் மனைவியாக சிஜாரோஸ். கணவரின் கண்ணியம் காக்கும் வேடம். அளவாக நடித்திருக்கிறார்.
மக்களைச் சிரிக்கவைக்கும் பொறுப்பு சூரிக்கு.வாய்விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளராக வரும் வேல்ராஜ், வில்லன் கலையரசன், சசிகுமார் மகனாக வருகிற சித்தார்த், ஜோதிகாவின் மகள் நிவேதிதா சதீஷ், ஆடுகளம் நரேன் ஆகிய அனைவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்