சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் 43 என்று கூறப்பட்ட இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள்.
ஆனால், கொரோனா காரணமாக எல்லாம் மாறிவிட்டது.
இவ்வாண்டு ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளி
யிடப்பட்டது.அதன்படி தனுஷ் 43 படத்தின் பெயர் மாறன்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக இன்னும் முடிவடையவில்லை நானே வருவேன் படப்பிடிப்புக்கு தேதி ஒதுக்கியதால் மாறன் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடத்தி முடிக்கப்பட முடியாத நிலை தொடர்கிறது
இந்நிலையில், இப்படத்தை திரையரங்கில் வெளியிட நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டிய சூழல் இருப்பதால் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பு தரப்பு இறங்கியுள்ளது
முன்னணி இணைய நிறுவனமொன்று இப்படத்தைச் சுமார் 35 கோடி கொடுத்து வாங்கிகொள்ள ஒப்புதல் அளித்துள்ளதால் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது