மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழ் திரையுலகுக்கு பொற்காலம் – திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ராமசாமி @முரளிவெளியிட்டுள்ள அறிக்கையில்
உதய சூரியன் பார்வையில் தமிழகம் இனி வீறுநடைபோடும்தமிழகஅரசியல் வரலாறு 58 வருடங்களுக்கு மேலாக அரசியலும் சினிமாவும் பின்னி பிணைந்தே வருகிறதுடாக்டர்கலைஞர் ஐந்துமுறை தமிழக முதல்அமைச்சராக பதவி வகித்தபோது தமிழகத்தை எல்லா துறைகளின் வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்டு செயல்படுத்தி வெற்றிகண்டார் அதிலும் தமிழ் திரையுலகம் மீது தனி கவனம் கொண்டு அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்
டாக்டர் கலைஞர் அவர்கள் திரை உலகிற்கு செய்த சாதனைகள் அதிகம் குறிப்பாக தமிழ் வார்த்தைகளில் படத்தலைப்பு வைத்தால் அந்த படங்களுக்கு கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்தார் அரசாங்க இடங்களில் நடைபெறும்படங்களின் படப்பிடிப்புக்கான கட்டணங்களை வெகுவாககுறைத்துதயாரிப்பாளர்கள்மனங்களை குளிர்வித்தார் சென்னை அருகே பையனூரில் தயாரிப்பாளர்கள் நடிகர் நடிகையர் இயக்குனர்கள் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சின்னத்திரையினர் அனைவருக்கும் வீடு கட்ட 100 ஏக்கர் இடம் தந்து அகம் மகிழச் செய்தார்
சட்டமன்ற உறுப்பினர் சென்னை நகர மேயர் இன்று மக்களின் ஆதரவோடு தமிழக முதல்வராகிறார் “மகன்தந்தைக்காற்றும் உதவி அவையத்தில் முந்தி இருப்பது”என்ற அய்யன் வள்ளுவனின் குறளுக்கு ஏற்பதந்தைவழியில்மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களின் ஆதரவோடு அசுர வளர்ச்சி பெற்று ஆட்சிபீடம் ஏறுவது எல்லோருக்கும் அளவில்லாத ஆனந்தம் என்றால் அது மிகையாகாது என்றே சொல்லலாம்
மக்களின் வாழ்வு இனி ஏற்றம் பெறும் என்பதில் இனி அய்யமில்லை அதேசமயம் இனிதிரைஉலகினருக்கும் பொற்காலம் என்றே சொல்லலாம் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமையும் புதிய அரசிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள்
 இருபத்திநான்குமணிநேரமும் மக்களை பற்றியே சிந்தித்து மக்களுடனே வலம்வரும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்