கொரானா சிக்கல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக பல திரைப்படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சில கோடிகளில் எடுக்கப்பட்ட குறைந்த செலவு திரைப்படங்களே நேரடியாக இணையத்தில் வெளியாகின.அவற்றைத் தாண்டி முதன்முறையாக ஒரு முன்னணி நடிகரின் படம்,அதிகச் செலவு செய்யப்பட்ட படம் என்று சொல்லி தெலுங்கு நடிகர் நானியின் வி என்கிற படத்தை அமேசான் நிறுவனம் நேரடியாக இணையத்தில் வெளீயிட்டது.தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானியின் இருபத்தைந்தாவது படம் மற்றும் சுமார் இருபத்தைந்து கோடி செலவில் எடுக்கப்பட்ட பெரிய படம் என்றெல்லாம் சொல்லி செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியிடப்பட்டது அந்தப்படம்.
தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப்படத்துக்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் நானியின் 25 ஆவது படம் தோல்வி என்றும் சொல்லப்படுகிறது.
பெரிய நடிகர் படம் தென்னிந்தியாவில் அதிகச் செலவு செய்த படம் ஆகிய முன்னுரைகளோடு வெளியிடப்பட்ட அந்தப் படம் தோல்வி அடைந்திருப்பதால் இணைய நிறுவனம் பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.