டிவிட்டரில் துரத்தும் நரகாசுரன்

முதல்படமான ’துருவங்கள் 16’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன்.

இவரதுஇயக்கத்தில் இரண்டாவதாக உருவான படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் இருவருக்கும் இடையில் தயாரிப்பு விஷயத்தில்பைனான்ஸ் பஞ்சாயத்து ஏற்பட்டது.
அதன்பின் கெளதம் மேனனின் பெயர் இல்லாமலேயே படத்தின் விளம்பரங்கள்வெளிவந்தது. ஆனால்,இன்னும் ‘நரகாசூரன்’ வெளியாகாமல் இருக்கிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் தொடங்கிய ‘மாஃபியா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, டிசம்பர் வெளியீட்டுக்காகத் தயாராகி வருகிறது.

இந்நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’ ஆகிய படங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவற்றைத் தொடர்ந்து, ‘துருவ நட்சத்திரம்’ படம் தொடர்பாக, “என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் கலைவடிவமான இந்தப் படம் இல்லாமல் இந்த சீஸன் முடிந்து விடாது. விக்ரமுடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம் . அடுத்த 60 நாட்களில் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து ‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டுக்குத் தயாராகும்” என்று ட்வீட் செய்திருந்தார் கெளதம் மேனன்.

அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் கார்த்திக் நரேன் “நரகாசூரன் எப்போது பகலின் வெளிச்சத்தைப் பார்க்கும் என்ற தெளிவான விளக்கம் மிகவும் உதவியாக இருக்கும் சார். ஆம், இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.