பொன்னியின் செல்வனால் பாதிக்கப்பட்ட பார்த்திபன்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் மணிரத்னம் கூறியதால் நடிகர் விஜயகுமார் ஆறுமாத காலமாக தாடி வளர்த்து வந்தார் ஆனால் அவரை அழைக்காமலே அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து படப்பிடிப்பை முடித்துவிட்டார் மணிரத்னம் இதனை அறிந்த விஜயகுமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் அதேபோன்ற நிலைமை தற்போது இயக்குநரும் நடிகருமான பார்த்திபனுக்கு ஏற்பட்டிருக்கிறது

லைகா தயாரிப்பில்மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு 2019 டிசம்பரில் தொடங்கியது. அதன்பின் பல தடைகள் சிக்கல்களைத்தாண்டி படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது.

இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல்பாகத்துக்கான பெரும்பகுதிப் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் முதல்பாகம் நிறைவு பெற்றுவிடும்

இந்நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வந்துள்ளது.இதனால் படப்பிடிப்பை தொடர முடியாமல்நின்றுபோயிருந்தது.

இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவரும் நடிகர் பார்த்திபனுக்கு, ஓர் ஆங்கிலப்படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று தெரியாமல் இருப்பதால் அந்த ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள பார்த்திபன் விரும்பினாராம்.

இந்தத் தகவல் அறிந்த மணிரத்னம் குழுவினர் பார்த்திபனைத் தொடர்பு கொண்டு, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிவடையும்வரை வேறு படத்துக்குப் போகமாட்டேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றீர்கள் அதனால் ஆங்கிலப்படத்தில் நடிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்

இதனால் பார்த்திபன், மணிரத்னம் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.