பதுக்கம்மா திருவிழாவிற்கு இசையமைக்கும் ரஹ்மான்

தெலங்கானா மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் வருடத்திற்கு ஒரு முறை ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழா பதுக்கம்மா

இந்தியாவில் நவராத்திரி திருவிழா நடக்கும் அதே காலகட்டத்தில் தெலங்கானா பகுதியில் நடக்கும் 9 நாள் திருவிழா பதுக்கம்மா. இந்த நாட்களில் தெலங்கனா பெண்கள், வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து இறைவனை வழிபடுவார்கள்.
வண்ண வண்ண உடைகள், ஆபரணங்கள் அணிந்து மகிழ்வார்கள். வண்ண மலர் கோலமாக இந்த விழா இருப்பதால் இதனை தெலுங்கான வண்ணவிழா என்றும் அழைப்பாளர்கள்.இத்திருவிழா தெலங்கனாவின் கலாச்சார பெருமையை வெளிப்படுத்தும் அம்சமாக, அனைவராலும் போற்றப்படும் விழாவாகும்.

இந்த விழாவை பற்றிய தனிப் பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரகுமானும், இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனும் இணைந்து உருவாக்குகிறார்கள். மிட்டபள்ளி சுரேந்தர் பாடலை எழுதி உள்ளார்.

தெலுங்கானா ஜகுர்தி என்ற அமைப்புசார்பில்எம்.எல்.சி.கே.கவிதா இதனை தயாரித்துள்ளார்.
இப்பாடல் நாளை(6.10.2021) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.